| 1246 | சென்று சின விடை ஏழும் பட அடர்ந்து பின்னை செவ்வித் தோள் புணர்ந்து உகந்த திருமால்-தன் கோயில் அன்று அயனும் அரன் சேயும் அனையவர்கள் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் அமர்ந்த செழுங் குன்றை கன்றி நெடு வேல் வலவன் மங்கையர்-தம் கோமான் கலிகன்றி ஒலி மாலை ஐந்தினொடு மூன்றும் ஒன்றினொடும் ஒன்றும் இவை கற்று வல்லார் உலகத்து உத்தமர்கட்கு உத்தமர் ஆய் உம்பரும் ஆவர்களே (10) |
|