1247போது அலர்ந்த பொழில் சோலைப் புறம் எங்கும் பொரு திரைகள்
தாது உதிர வந்து அலைக்கும் தட மண்ணித் தென் கரைமேல்
மாதவன்-தான் உறையும் இடம் வயல் நாங்கை-வரி வண்டு
தேதென என்று இசை பாடும்-திருத்தேவனார்தொகையே             (1)