1248யாவரும் ஆய் யாவையும் ஆய் எழில் வேதப் பொருள்களும் ஆய்
மூவரும் ஆய் முதல் ஆய மூர்த்தி அமர்ந்து உறையும் இடம்
மா வரும் திண் படை மன்னை வென்றி கொள்வார் மன்னு நாங்கை-
தேவரும் சென்று இறைஞ்சு பொழில்-திருத்தேவனார்தொகையே             (2)