1250இந்திரனும் இமையவரும் முனிவர்களும் எழில் அமைந்த
சந்த மலர்ச் சதுமுகனும் கதிரவனும் சந்திரனும்   
எந்தை எமக்கு அருள் என நின்றருளும் இடம் எழில் நாங்கை-
சுந்தர நல் பொழில் புடை சூழ்-திருத்தேவனார்தொகையே             (4)