1253ஓடாத ஆளரியின் உரு ஆகி இரணியனை     
வாடாத வள் உகிரால் பிளந்து அளைந்த மாலது இடம்
ஏடு ஏறு பெருஞ் செல்வத்து எழில் மறையோர் நாங்கை-தன்னுள்-
சேடு ஏறு பொழில் தழுவு-திருத்தேவனார்தொகையே             (7)