1254வார் ஆரும் இளங் கொங்கை மைதிலியை மணம் புணர்வான்
கார் ஆர் திண் சிலை இறுத்த தனிக் காளை கருதும் இடம்
ஏர் ஆரும் பெருஞ் செல்வத்து எழில் மறையோர் நாங்கை-தன்னுள்-
சீர் ஆரும் மலர்ப் பொழில் சூழ்-திருத்தேவனார்தொகையே             (8)