1258பல்லவம் திகழ் பூங் கடம்பு ஏறி அக்
      காளியன் பண அரங்கில்
ஒல்லை வந்து உறப் பாய்ந்து அரு நடம்செய்த
      உம்பர்-கோன் உறை கோயில்-
நல்ல வெம் தழல் மூன்று நால் வேதம் ஐ
      வேள்வியோடு ஆறு அங்கம்
வல்ல அந்தணர் மல்கிய நாங்கூர்
      -வண்புருடோத்தமமே             (2)