1261சாடு போய் விழத் தாள் நிமிர்ந்து ஈசன் தன்
      படையொடும் கிளையோடும்
ஓட வாணனை ஆயிரம் தோள்களும்
      துணித்தவன் உறை கோயில்-
ஆடு வான் கொடி அகல் விசும்பு அணவிப் போய்ப்
      பகலவன் ஒளி மறைக்கும்
மாட மாளிகை சூழ்தரு நாங்கூர்-
      வண்புருடோத்தமமே             (5)