1264வாளை ஆர் தடங் கண் உமை-பங்கன் வன்
      சாபம் மற்று அது நீங்க
மூளை ஆர் சிரத்து ஐயம் முன் அளித்த எம்
      முகில் வண்ணன் உறை கோயில்-
பாளை வான் கமுகு ஊடு உயர் தெங்கின் வண்
      பழம் விழ வெருவிப் போய்
வாளை பாய் தடம் சூழ்தரு நாங்கூர்-
      வண்புருடோத்தமமே                (8)