1268பிறப்பொடு மூப்பு ஒன்று இல்லவன்-தன்னை
      பேதியா இன்ப வெள்ளத்தை
இறப்பு எதிர் காலம் கழிவும் ஆனானை
      ஏழ் இசையின் சுவை-தன்னை
சிறப்பு உடை மறையோர் நாங்கை நல் நடுவுள்
      செம்பொன்செய்கோயிலினுள்ளே
மறைப் பெரும் பொருளை வானவர்-கோனை-
      கண்டு நான் வாழ்ந்தொழிந்தேனே (2)