1269திட விசும்பு எரி நீர் திங்களும் சுடரும்
      செழு நிலத்து உயிர்களும் மற்றும்
படர் பொருள்களும் ஆய் நின்றவன்-தன்னை
      பங்கயத்து அயன்-அவன் அனைய
திட மொழி மறையோர் நாங்கை நல் நடுவுள்
      செம்பொன்செய்கோயிலினுள்ளே
கடல் நிற வண்ணன்-தன்னை-நான் அடியேன்
      கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே            (3)