127அரவு அணையாய் ஆயர் ஏறே
      அம்மம் உண்ணத் துயிலெழாயே
இரவும் உண்ணாது உறங்கி நீ போய்
      இன்றும் உச்சி கொண்டதாலோ
வரவுங் காணேன்;வயிறு அசைந்தாய்
      வன முலைகள் சோர்ந்து பாயத்
திரு உடைய வாய்மடுத்துத்
      திளைத்து உதைத்துப் பருகிடாயே             (1)