1271 | தீ மனத்து அரக்கர் திறல் அழித்தவனே என்று சென்று அடைந்தவர்-தமக்குத் தாய் மனத்து இரங்கி அருளினைக் கொடுக்கும் தயரதன் மதலையை சயமே தே மலர்ப் பொழில் சூழ் நாங்கை நல் நடுவுள் செம்பொன்செய்கோயிலினுள்ளே காமனைப் பயந்தான்-தன்னை-நான் அடியேன் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே (5) |
|