1272 | மல்லை மா முந்நீர் அதர்பட மலையால் அணைசெய்து மகிழ்ந்தவன்-தன்னை கல்லின்மீது இயன்ற கடி மதிள் இலங்கை கலங்க ஓர் வாளி தொட்டானை- செல்வ நான்மறையோர் நாங்கை நல் நடுவுள் செம்பொன்செய்கோயிலினுள்ளே அல்லி மா மலராள்-தன்னொடும் அடியேன் கண்டுகொண்டு அல்லல் தீர்ந்தேனே (6) |
|