1273 | வெம் சினக் களிறும் வில்லொடு மல்லும் வெகுண்டு இறுத்து அடர்த்தவன்-தன்னை கஞ்சனைக் காய்ந்த காளை அம்மானை கரு முகில் திரு நிறத்தவனை செஞ்சொல் நான்மறையோர் நாங்கை நல் நடுவுள் செம்பொன்செய்கோயிலினுள்ளே அஞ்சனக் குன்றம் நின்றது ஒப்பானை- கண்டுகொண்டு அல்லல் தீர்ந்தேனே (7) |
|