1275களங்கனி வண்ணா கண்ணனே என்-தன்
      கார் முகிலே என நினைந்திட்டு
உளம் கனிந்திருக்கும் அடியவர்-தங்கள்
      உள்ளத்துள் ஊறிய தேனை
தெளிந்த நான்மறையோர் நாங்கை நல் நடுவுள்
      செம்பொன்செய்கோயிலினுள்ளே
வளம் கொள் பேர் இன்பம் மன்னி நின்றானை-
      வணங்கி நான் வாழ்ந்தொழிந்தேனே (9)