1277மாற்றரசர் மணி முடியும் திறலும் தேசும்
      மற்று அவர்-தம் காதலிமார் குழையும் தந்தை   
கால் தளையும் உடன் கழல வந்து தோன்றி
      கத நாகம் காத்து அளித்த கண்ணர் கண்டீர்-
நூற்றிதழ் கொள் அரவிந்தம் நுழைந்த பள்ளத்து
      இளங் கமுகின் முது பாளை பகு வாய் நண்டின்
சேற்று அளையில் வெண் முத்தம் சிந்தும் நாங்கூர்த்
      திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே (1)