1279 | படல் அடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்கு பசு வெண்ணெய் பதம் ஆர பண்ணை முற்றும் அடல் அடர்த்த வேல் கணார் தோக்கை பற்றி அலந்தலைமை செய்து உழலும் ஐயன் கண்டீர்- மடல் எடுத்த நெடுந் தெங்கின் பழங்கள் வீழ மாங்கனிகள் திரட்டு உருட்டாவரு நீர்ப் பொன்னி திடல் எடுத்து மலர் சுமந்து அங்கு இழியும் நாங்கூர்த் திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே (3) |
|