1280வார் ஆரும் முலை மடவாள் பின்னைக்கு ஆகி
      வளை மருப்பின் கடுஞ் சினத்து வன் தாள் ஆர்ந்த
கார் ஆர் திண் விடை அடர்த்து வதுவை ஆண்ட
      கரு முகில்போல் திரு நிறத்து என் கண்ணர் கண்டீர்-
ஏர் ஆரும் மலர்ப் பொழில்கள் தழுவி எங்கும்
       எழில் மதியைக் கால் தொடர விளங்கு சோதிச்
சீர் ஆரும் மணி மாடம் திகழும் நாங்கூர்த்
      திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே             (4)