1281கலை இலங்கும் அகல் அல்குல் கமலப் பாவை
      கதிர் முத்த வெண் நகையாள் கருங் கண் ஆய்ச்சி
முலை இலங்கும் ஒளி மணிப் பூண் வடமும் தேய்ப்ப
      மூவாத வரை நெடுந் தோள் மூர்த்தி கண்டீர்-
மலை இலங்கு நிரைச் சந்தி மாட வீதி
      ஆடவரை மட மொழியார் முகத்து இரண்டு
சிலை விலங்கி மனம் சிறை கொண்டு இருக்கும் நாங்கூர்த்
      திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே            (5)