1282 | தான்போலும் ஏன்று எழுந்தான் தரணியாளன் அது கண்டு தரித்திருப்பான் அரக்கர்-தங்கள் கோன்போலும் ஏன்று எழுந்தான் குன்றம் அன்ன இருபது தோள் உடன் துணித்த ஒருவன் கண்டீர்- மான்போலும் மென் நோக்கின் செய்ய வாயார் மரகதம்போல் மடக் கிளியைக் கைமேல் கொண்டு தேன்போலும் மென் மழலை பயிற்றும் நாங்கூர்த் திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே (6) |
|