1283பொங்கு இலங்கு புரி நூலும் தோலும் தாழப்
      பொல்லாத குறள் உரு ஆய் பொருந்தா வாணன்
மங்கலம் சேர் மறை வேள்வி-அதனுள் புக்கு
      மண் அகலம் குறை இரந்த மைந்தன் கண்டீர்-
கொங்கு அலர்ந்த மலர்க் குழலார் கொங்கை தோய்ந்த
      குங்குமத்தின் குழம்பு அளைந்த கோலம்-தன்னால்
செங் கலங்கல் வெண் மணல்மேல் தவழும் நாங்கூர்த்
      திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே             (7)