1286சீர் அணிந்த மணி மாடம் திகழும் நாங்கூர்த்
      திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலை
கூர் அணிந்த வேல் வலவன் ஆலி நாடன்
      கொடி மாட மங்கையர்-கோன் குறையல் ஆளி
பார் அணிந்த தொல் புகழான் கலியன் சொன்ன
      பாமாலை இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்
சீர் அணிந்த உலகத்து மன்னர் ஆகி
      சேண் விசும்பில் வானவர் ஆய்த் திகழ்வர்-தாமே             (10)