1288கவ்வை வாள் எயிற்று வன் பேய்க்
      கதிர் முலை சுவைத்து இலங்கை
வவ்விய இடும்பை தீரக்
      கடுங் கணை துரந்த எந்தை-   
கொவ்வை வாய் மகளிர் கொங்கைக்
      குங்குமம் கழுவிப் போந்த
தெய்வ நீர் கமழும் நாங்கூர்த்
      திருமணிக்கூடத்தானே             (2)