1291கரு மகள் இலங்கையாட்டி
      பிலங் கொள் வாய் திறந்து தன்மேல்
வரும்-அவள் செவியும் மூக்கும்
      வாளினால் தடிந்த எந்தை-   
பெரு மகள் பேதை மங்கை
      தன்னொடும் பிரிவு இலாத
திருமகள் மருவும் நாங்கூர்த்
      திருமணிக்கூடத்தானே             (5)