1292கெண்டையும் குறளும் புள்ளும்
      கேழலும் அரியும் மாவும்
அண்டமும் சுடரும் அல்லா
      ஆற்றலும் ஆய எந்தை-
ஒண் திறல் தென்னன் ஓட
      வட அரசு ஓட்டம் கண்ட
திண் திறலாளர் நாங்கூர்த்
      திருமணிக்கூடத்தானே             (6)