1293குன்றமும் வானும் மண்ணும்
      குளிர் புனல் திங்களோடு
நின்ற வெம் சுடரும் அல்லா
      நிலைகளும் ஆய எந்தை-
மன்றமும் வயலும் காவும்
      மாடமும் மணங் கொண்டு எங்கும்
தென்றல் வந்து உலவும் நாங்கூர்த்
      திருமணிக்கூடத்தானே             (7)