131தீய புந்திக் கஞ்சன் உன்மேல்
      சினம் உடையன் சோர்வு பார்த்து
மாயந்தன்னால் வலைப்படுக்கில்
      வாழகில்லேன் வாசுதேவா
தாயர் வாய்ச்சொல் கருமம் கண்டாய்
      சாற்றிச் சொன்னேன் போகவேண்டா
ஆயர் பாடிக்கு அணிவிளக்கே
      அமர்ந்து வந்து என் முலை உணாயே             (5)