1337 | ஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெய் உண்டு ஒருகால் ஆல் இலை வளர்ந்த எம் பெருமான் பேய்ச்சியை முலை உண்டு இணை மருது இறுத்து பெரு நிலம் அளந்தவன் கோயில்- காய்த்த நீள் கமுகும் கதலியும் தெங்கும் எங்கும் ஆம் பொழில்களின் நடுவே வாய்த்த நீர் பாயும் மண்ணியின் தென்பால்- திருவெள்ளியங்குடி-அதுவே (1) |
|