1339 | கடு விடம் உடைய காளியன் தடத்தைக் கலக்கி முன் அலக்கழித்து அவன்-தன் படம் இறப் பாய்ந்து பல் மணி சிந்தப் பல் நடம் பயின்றவன் கோயில்- பட அரவு அல்குல் பாவை நல்லார்கள் பயிற்றிய நாடகத்து ஒலி போய் அடை புடை தழுவி அண்டம் நின்று அதிரும்- திருவெள்ளியங்குடி-அதுவே (3) |
|