1342காற்றிடைப் பூளை கரந்தென அரந்தை
      உற கடல் அரக்கர்-தம் சேனை
கூற்றிடைச் செல்ல கொடுங் கணை துரந்த
      கோல வில் இராமன்-தன் கோயில்-
ஊற்றிடை நின்ற வாழையின் கனிகள்
      ஊழ்த்து வீழ்ந்தன உண்டு மண்டி
சேற்றிடைக் கயல்கள் உகள் திகழ் வயல் சூழ்-
      திருவெள்ளியங்குடி-அதுவே             (6)