1343 | ஒள்ளிய கருமம் செய்வன் என்று உணர்ந்த மாவலி வேள்வியில் புக்கு தெள்ளிய குறள் ஆய் மூவடி கொண்டு திக்கு உற வளர்ந்தவன் கோயில்- அள்ளி அம் பொழில்வாய் இருந்து வாழ் குயில்கள் அரி அரி என்று அவை அழைப்ப வெள்ளியார் வணங்க விரைந்து அருள்செய்வான்- திருவெள்ளியங்குடி-அதுவே (7) |
|