1344 | முடி உடை அமரர்க்கு இடர் செய்யும் அசுரர்- தம் பெருமானை அன்று அரி ஆய் மடியிடை வைத்து மார்வம் முன் கீண்ட மாயனார் மன்னிய கோயில்- படியிடை மாடத்து அடியிடைத் தூணில் பதித்த பல் மணிகளின் ஒளியால் விடி பகல் இரவு என்று அறிவு-அரிது ஆய- திருவெள்ளியங்குடி-அதுவே (8) |
|