1345 | குடி குடி ஆகக் கூடி நின்று அமரர் குணங்களே பிதற்றி நின்று ஏத்த அடியவர்க்கு அருளி அரவு-அணைத் துயின்ற ஆழியான் அமர்ந்து உறை கோயில்- கடி உடைக் கமலம் அடியிடை மலர கரும்பொடு பெருஞ் செந்நெல் அசைய வடிவு உடை அன்னம் பெடையொடும் சேரும் வயல்-வெள்ளியங்குடி-அதுவே (9) |
|