135அங் கமலப் போதகத்தில்
      அணி கொள் முத்தம் சிந்தினாற்போல்
செங் கமல முகம் வியர்ப்ப
      தீமை செய்து இம் முற்றத்தூடே
அங்கம் எல்லாம் புழுதியாக
      அளைய வேண்டா அம்ம விம்ம
அங்கு அமரர்க்கு அமுது அளித்த
      அமரர் கோவே முலை உணாயே            (9)