136ஓட ஓடக் கிண்கிணிகள்
      ஒலிக்கும் ஓசைப் பாணியாலே
பாடிப் பாடி வருகின்றாயைப்
      பற்பநாபன் என்று இருந்தேன்
ஆடி ஆடி அசைந்து அசைந்திட்டு
      அதனுக்கு ஏற்ற கூத்தை ஆடி
ஓடி ஒடிப் போய்விடாதே
      உத்தமா நீ முலை உணாயே             (10)