1367வென்றி மா மழு ஏந்தி முன் மண்மிசை
      மன்னரை மூவெழுகால்
கொன்ற தேவ!-நின் குரை கழல் தொழுவது ஓர்
      வகை எனக்கு அருள்புரியே-
மன்றில் மாம் பொழில் நுழைதந்து மல்லிகை
      மௌவலின் போது அலர்த்தி
தென்றல் மா மணம் கமழ்தர வரு திரு
      வெள்ளறை நின்றானே             (1)