1369வெய்யன் ஆய் உலகு ஏழ் உடன் நலிந்தவன்
      உடலகம் இரு பிளவாக்
கையில் நீள் உகிர்ப் படை-அது வாய்த்தவ
      னே!-எனக்கு அருள்புரியே-
மையின் ஆர்தரு வரால் இனம் பாய வண்
      தடத்திடைக் கமலங்கள்
தெய்வம் நாறும் ஒண் பொய்கைகள் சூழ் திரு
      வெள்ளறை நின்றானே             (3)