1371மான வேல் ஒண் கண் மடவரல் மண்-மகள்
      அழுங்க முந்நீர்ப் பரப்பில்
ஏனம் ஆகி அன்று இரு நிலம் இடந்தவ
      னே!-எனக்கு அருள்புரியே-
கான மா முல்லை கழைக் கரும்பு ஏறி வெண்
      முறுவல் செய்து அலர்கின்ற
தேனின் வாய் மலர் முருகு உகுக்கும் திரு
      வெள்ளறை நின்றானே             (5)