1373ஆறினோடு ஒரு நான்கு உடை நெடு முடி
      அரக்கன்-தன் சிரம் எல்லாம்
வேறு வேறு உக வில்-அது வளைத்தவ
      னே!-எனக்கு அருள்புரியே-
மாறு இல் சோதிய மரகதப் பாசடைத்
      தாமரை மலர் வார்ந்த
தேறல் மாந்தி வண்டு இன் இசை முரல் திரு
      வெள்ளறை நின்றானே (7)