1376மஞ்சு உலாம் மணி மாடங்கள் சூழ் திரு
      வெள்ளறை-அதன் மேய
அஞ்சனம் புரையும் திரு உருவனை
      ஆதியை அமுதத்தை
நஞ்சு உலாவிய வேல் வலவன் கலி
      கன்றி சொல் ஐஇரண்டும்
எஞ்சல் இன்றி நின்று ஏத்த வல்லார் இமை
      யோர்க்கு அரசு ஆவர்களே (10)