1397கைம் மான மழ களிற்றை கடல் கிடந்த கருமணியை
மைம் மான மரகதத்தை மறை உரைத்த திருமாலை
எம்மானை எனக்கு என்றும் இனியானை பனி காத்த
அம்மானை யான் கண்டது-அணி நீர்த் தென் அரங்கத்தே             (1)