1401நீர் அழல் ஆய் நெடு நிலன் ஆய் நின்றானை அன்று அரக்கன்-
ஊர் அழலால் உண்டானை கண்டார் பின் காணாமே
பேர் அழல் ஆய் பெரு விசும்பு ஆய் பின் மறையோர் மந்திரத்தின்
ஆர் அழலால் உண்டானைக் கண்டது-தென் அரங்கத்தே             (5)