1405பொய் வண்ணம் மனத்து அகற்றி புலன் ஐந்தும் செல வைத்து
மெய் வண்ணம் நினைந்தவர்க்கு மெய்ந் நின்ற வித்தகனை
மை வண்ணம் கரு முகில்போல் திகழ் வண்ணம் மரகதத்தின்
அவ் வண்ண வண்ணனை யான் கண்டது-தென் அரங்கத்தே             (9)