1406ஆ மருவி நிரை மேய்த்த அணி அரங்கத்து அம்மானைக்
காமரு சீர்க் கலிகன்றி ஒலிசெய்த மலி புகழ் சேர்
நா மருவு தமிழ்-மாலை நால் இரண்டோடு இரண்டினையும்
தாம் மருவி வல்லார்மேல் சாரா தீவினை தாமே             (10)