1407 | பண்டை நான்மறையும் வேள்வியும் கேள்விப் பதங்களும் பதங்களின் பொருளும் பிண்டம் ஆய் விரிந்த பிறங்கு ஒளி அனலும் பெருகிய புனலொடு நிலனும் கொண்டல் மாருதமும் குரை கடல் ஏழும் ஏழு மா மலைகளும் விசும்பும் அண்டமும் தான் ஆய் நின்ற எம் பெருமான்- அரங்க மா நகர் அமர்ந்தானே (1) |
|