1413 | சுரி குழல் கனி வாய்த் திருவினைப் பிரித்த கொடுமையின் கடு விசை அரக்கன் எரிவிழித்து இலங்கும் மணி முடி பொடிசெய்து இலங்கை பாழ்படுப்பதற்கு எண்ணி வரி சிலை வளைய அடு சரம் துரந்து மறி கடல் நெறிபட மலையால் அரிகுலம் பணிகொண்டு அலை கடல் அடைத்தான்- அரங்க மா நகர் அமர்ந்தானே (7) |
|