1419 | கடி கொள் பூம் பொழில் காமரு பொய்கை வைகு தாமரை வாங்கிய வேழம் முடியும் வண்ணம் ஓர் முழு வலி முதலை பற்ற மற்று அது நின் சரண் நினைப்ப கொடிய வாய் விலங்கின் உயிர் மலங்கக் கொண்ட சீற்றம் ஒன்று உண்டு உளது அறிந்து உன அடியனேனும் வந்து அடி-இணை அடைந்தேன்- அணி பொழில் திருவரங்கத்து அம்மானே (3) |
|