1423 | ஓது வாய்மையும் உவனியப் பிறப்பும் உனக்கு முன் தந்த அந்தணன் ஒருவன் காதல் என் மகன் புகல் இடம் காணேன் கண்டு நீ தருவாய் எனக்கு என்று கோது இல் வாய்மையினான் உனை வேண்டிய குறை முடித்து அவன் சிறுவனைக் கொடுத்தாய்- ஆதலால் வந்து உன் அடி-இணை அடைந்தேன்- அணி பொழில் திருவரங்கத்து அம்மானே (7) |
|