145 | என் குற்றமே என்று சொல்லவும் வேண்டா காண் என்னை நான் மண் உண்டேனாக அன்புற்று நோக்கி அடித்தும் பிடித்தும் அனைவர்க்கும் காட்டிற்றிலையே? வன் புற்று அரவின் பகைக் கொடி வாமன நம்பீ உன்காதுகள் தூரும் துன்புற்றன எல்லாம் தீர்ப்பாய் பிரானே திரியிட்டுச் சொல்லுகேன் மெய்யே (8) |
|